நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்

334பார்த்தது
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகனாரையில், தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் சிவண்ணா தொடங்கி வைத்த இந்த முகாமில், இருதய நோய், கண், ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, காசநோய், எலும்பு மூட்டு, பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. வட்டார மருத்துவர் அலுவலர் தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கு. செந்தூர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாதேவ பிரசாத், ஒன்றிய மாணவரணி சிவபிரசாத் மற்றும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Job Suitcase

Jobs near you