ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் இன்று மாலை 5 மணி அளவில் கோடை மழை பெய்தது. மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.