ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று (மே 29) இரவு எட்டு மணி முதல் இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்தது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், மாலை 4 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. பிறகு இரவு எட்டு மணி முதல் தொடர்ந்து மழை பெய்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. கதறி வெயில் முடிந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.