தாளவாடி: வனப்பகுதியில் யானைக்குட்டி உயிரிழப்பு

581பார்த்தது
தாளவாடி: வனப்பகுதியில் யானைக்குட்டி உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், ஆசனூர் வனச்சரகத்திற்குட்பட்ட ஜீரஹள்ளி வனப்பகுதியில், சுமார் 10 மாத ஆண் யானைக் குட்டி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சனிக்கிழமை மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தாய் யானை அருகில் இருந்த நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் விரட்டப்பட்ட பிறகு கால்நடை மருத்துவர் குழு உடற்கூறாய்வு செய்தது.

தொடர்புடைய செய்தி