சத்தியமங்கலம்: மயங்கி விழுந்த பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை

626பார்த்தது
சத்தியமங்கலம்: மயங்கி விழுந்த பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை
சத்தியமங்கலம் அருகே முதியனூர் கிராமத்தில் மைக்கேல் என்பவரின் விவசாய தோட்டத்தில் ஒரு பெண் யானை உடல்நலக்குறைவால் படுத்திருந்தது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி பயிர்களை சேதப்படுத்திய பின் யானை மயங்கி விழுந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். யானை எழுந்து செல்ல முடியாததால், கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி