தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று முதியனூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் திடீரென உடல்நலக்குறைவால் சரிந்தது. வியாழக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தை அறிந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்தும், கிரேன் மூலம் தூக்கி நிறுத்தியும் பலனளிக்கவில்லை. கால்நடை மருத்துவர் சதாசிவம் தீவிர சிகிச்சை அளித்தார்.