ஈரோடு மாவட்டம் பண்ணாரி சத்தியமங்கலம் சாலையில் நேற்று இரவு புலிகள் நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். புலிகள் வாகனங்களை மிரட்டி மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் திரும்பினர்.