கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கோவைக்கு பார்சல் சர்வீஸ் கண்டெய்னர் லாரி, சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் பதினோராவது கொண்டை ஊசி வளைவில் வரும்போது விபத்துக்குள்ளானது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் (35) ஓட்டி வந்த இந்த லாரி கவிழ்ந்ததால், அப்பகுதியில் சுமார் நான்கு மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆசனூர் போலீசார் லாரியை மீட்டு பண்ணாரி சோதனைச் சாவடிக்கு கொண்டு சென்ற பிறகு
போக்குவரத்து சீரானது.