கேர்மாளம் ஊராட்சியில் உள்ள கானாக்கரை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் வழங்கும் ஆழ்குழாய் மின் மோட்டார் பழுதடைந்ததால், கிராம மக்கள் குடிநீர் இன்றி பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஒடையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பழுதடைந்த மின் மோட்டரை சீர் செய்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.