பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

4பார்த்தது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. 20-11-2025 அன்று காலை 8 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம் 102.58 அடியாகவும், சேமிப்பு 30.78 டிஎம்சியாகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அணைக்கு வந்த நீர்வரத்து 1998 கன அடி என்ற நிலையில் இருந்து தற்போது 569 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து மொத்தம் 2400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.