பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 103 அடியை தாண்டியது

3பார்த்தது
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 103 அடியை தாண்டியது
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 103.06 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 105 அடி ஆகும். தற்போது அணையில் 31.18 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அணையின் சராசரி நீர்வரத்து 3260 கன அடியாகவும், தற்போதைய நீர்வரத்து 2721 கன அடியாகவும் உள்ளது. வெளியேற்றம் 2700 கன அடியாக உள்ளது. அணைப் பகுதியில் 1.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.