5-11-2025 அன்று காலை 6 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102.99 அடியாக (105 அடி கொள்ளளவு) உள்ளது. அணையில் 31.12 டி.எம்.சி (32.8 டி.எம்.சி கொள்ளளவு) நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3874 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், வினாடிக்கு 2700 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் கீழ்பவானி கால்வாய்க்கு 2300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.