வாய்க்காலுக்கு தண்ணீர் குறைக்கப்பட்டது

2பார்த்தது
வாய்க்காலுக்கு தண்ணீர் குறைக்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 86.94 அடியாக உள்ளது. சேமிப்பு 19.65 டிஎம்சியாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அணையின் சராசரி நீர்வரத்து 119 கன அடியாகவும், தற்போதைய நீர்வரத்து 109 கன அடியாகவும் உள்ளது. கால்வாய் பாசனத்திற்கு 1500 கன அடி, ஆற்றில் 950 கன அடி, குடிநீருக்கு 100 கன அடி என மொத்தம் 2550 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காலிங்கராயன் வாய்க்காலில் நீர் திறப்பு இல்லை. மழைப்பொழிவு இல்லை.

தொடர்புடைய செய்தி