ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 3500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில், நேற்று அணையின் உதவி பொறியாளர் தமிழ் பாரத் தண்ணீரை திறந்து வைத்தார். விவசாயிகள் இந்த நீர் திறப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.