தாளவாடியில் காரை துரத்தி சென்ற காட்டு யானை

3பார்த்தது
தாளவாடியில் காரை துரத்தி சென்ற காட்டு யானை
சத்தியமங்கலம் அருகே ஆசனூர் வனச்சரகத்தில், உணவு தேடி அடிக்கடி சாலையை கடக்கும் யானைகள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு காரில் சென்ற 4 பேர், அரேபாளையம் பிரிவு அருகே சென்றபோது வனப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை காரை வழிமறித்து, முன் பக்க கண்ணாடியை துதிக்கையால் தட்டியது. இதனால் காரில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி