சத்தியமங்கலம்: தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

642பார்த்தது
சத்தியமங்கலம்: தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மல்லன்குழி கிராமத்தில், விவசாயி மோகன்ராஜின் தோட்டத்தில் புகுந்த யானை ஒன்று டிராக்டர், தென்னை மரங்கள் மற்றும் பேட்டரி வேலி கம்பிகளை சேதப்படுத்தியுள்ளது. இதனால் சுமார் 20 தென்னை மரங்கள், பைப்லைன் மற்றும் டிராக்டர் சேதமடைந்துள்ளன. வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், வனத்துறையினர் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி