ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் காட்டு யானை ஒன்று, பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலில் மணியடித்து வணங்கிச் சென்றது. நேற்று, திம்பம் மலைப்பாதை வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் விநாயகருக்கு பூஜை செய்தபோது, அப்பகுதியிலிருந்த காட்டு யானை ஒன்று திடீரென கோவிலுக்கு வந்து மணியடித்து, தும்பிக்கையால் வணங்கிச் சென்றது. இதை வாகன ஓட்டிகள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர். இந்த சம்பவம் வனவிலங்குகளின் மனித நேயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.