ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புகுந்த காட்டு யானை, அருள்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதேவ செட்டி (54) என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து தென்னை, பாக்கு, மக்காச்சோளப் பயிர்களைச் சேதப்படுத்தியது. இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு விவசாயிகள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.