ஈரோடு: நீரில் மூழ்கிய மாணவன்.. காப்பாற்ற சென்றவரும் பலி

640பார்த்தது
ஈரோடு: நீரில் மூழ்கிய மாணவன்.. காப்பாற்ற சென்றவரும் பலி
கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர் 12-ம் வகுப்பு மாணவர் ரக்சன் ஆகியோர் கொடிவேரி அணைக்குச் சுற்றுலா சென்று திரும்பும் வழியில் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீச்சல் தெரியாத மாணவன் ரக்சன் நீரில் தத்தளித்தபோது, அவனைக் காப்பாற்ற முயன்ற கார்த்திகேயனும் எதிர்பாராதவிதமாக நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் இருவரது உடல்களையும் மீட்ட நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி