
ஈரோடு: இடி, மின்னலுடன் கனமழை.. வானிலை எச்சரிக்கை
வடக்கு கடலோர தமிழகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை சுமார் 0.9 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன்காரணமாக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன்.29) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



































