கோபி வடுகபாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்த தருண்குமார் (25) என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 16 வயது பாலிடெக்னிக் மாணவியை கடந்த 2023 ஜனவரியில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவி பேசுவதை நிறுத்தியதால், புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, 2023 பிப்ரவரி 8 அன்று தருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், நீதிபதி சொர்ணாகுமார் நேற்று இறுதி விசாரணை முடித்து தீர்ப்பளித்தார்.