ஈரோடு அருகே 11ஆம் வகுப்பு மாணவி தலை மீது சுவர் விழுந்து பலி

7பார்த்தது
ஈரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியைச் சேர்ந்த தறித் தொழிலாளி விஸ்வநாதனின் மகள் கனிகா (16), நேற்று மாலை வீட்டின் அருகே அமர்ந்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல்பாளையம் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி