ஈரோடு கே. கே. நகரில் தையல் கலைஞர் விமல் - லீடியா தம்பதியினர் தங்கள் மகளின் சிகிச்சைக்காக பெருந்துறைக்குச் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மாலையில் வீடு திரும்பிய தம்பதியினர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விமல் அளித்த புகாரின் பேரில், ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களைச் சேகரித்து, மோப்பநாய் உதவியுடன் மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.