ஈரோடு பாசூர் தடுப்பணை அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள், அவரது மனைவி பாரதி மற்றும் உறவினர் பிரதீபா ஆகிய மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மலையம்பாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.