ஈரோட்டில் வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு சீல்

77பார்த்தது
ஈரோட்டில் வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு சீல்
ரூ. 2. 23 கோடி நிலுவைத் தொகை பாக்கிஈரோட்டில் வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு சீல் முன்னறிவிப்பு இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் புகார்

ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கனி மார்க்கெட் எனப்படும் ஜவுளி சந்தை வணிக வளாகத்தில் 8 மாத காலமாக வாடகை செலுத்தாத 25 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் இன்று காலை சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மொத்தமுள்ள 203 கடைகளில் ரூ. 2 கோடியே 23 லட்சம் ரூபாய் அளவிற்கு வாடகை நிலுவை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் முதல் கட்டமாக ரூ. 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நிலுவைத் தொகை வைத்துள்ள 25 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதே போல் நேதாஜி வணிகவளாகத்தில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொது ஏலத்தில் 30 மாத முன் வைப்புத் தொகை செலுத்தி கடைகளை வணிகர்கள் வாடகைக்கு எடுத்திருந்தனர். 

இதில் குறிப்பிட்ட காலத்திற்கான வாடகை தொகை, முன் வைப்புத்தொகையில் இருந்து எடுத்து கொள்ளப்படுவதாக மாநகராட்சி அறிவித்திருந்தது. இதனிடையே, அந்தத் தொகை கழிக்கப்பட்ட பிறகும் கடந்த 8 மாத காலமாக வாடகை செலுத்தவில்லை எனக் கூறி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் 25 கடைகளுக்கும் மாநகராட்சி நிர்வாகம் பூட்டி சீல் வைத்ததாக வணிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி