ஈரோடு: கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ.46 கோடி ஒதுக்கீடு

611பார்த்தது
தந்தை பெரியார் முயற்சியால் உருவான சிக்கைய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு, மாணவர் நலனுக்காக 52 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் பிரம்மாண்ட நூலகம், ஐஏஎஸ் பயிற்சி மையம், மற்றும் நவீன விளையாட்டு மைதானம் ஆகியவை அடங்கும். முதல்வர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளின் வளர்ச்சிக்கும் ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி