ஈரோடு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வில் 5,796 பேர் பங்கேற்பு

81பார்த்தது
ஈரோடு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வில் 5,796 பேர் பங்கேற்பு
ஈரோடு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 5,796 பேர் எழுதினர்: 1,855 பேர் ஆப்சென்ட் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1 முதல் நிலை தேர்வை 5,796 பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில், சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்கள் உள்ளன. 

தமிழ்நாடு முழுவதும் இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேர், குரூப்-1ஏ பதவிக்கு 6 ஆயிரத்து 465 பேர், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிக்கு 14 ஆயிரத்து 849 பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. 

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் அத்தேர்வினை எழுத 7,651 பேர் நுழைவு சீட்டு வழங்கி அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், 5,796 பேர் தேர்வு எழுதினர். மேலும், 1,855 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தொடர்புடைய செய்தி