ஈரோடு வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இதில் பெரும்பாலான ரெயில்கள் வடமாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு ரெயில்நிலையும் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். சமீப காலமாக ஈரோடு வழியாக வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஈரோடு ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மதுவிலக்கு போலீசாரும் உடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் மற்றும் ஈரோடு ரெயில்வே போலீசார் ஒன்றிணைந்து ஈரோட்டுக்கு வரும் ரெயில்களை கண்காணித்து வந்தனர்.