ஈரோடு இந்திரா நகரில் வசிக்கும் மருத்துவர் மற்றும் ஜவுளி தொழில் செய்யும் ராஜன் - நிர்மலா தேவி தம்பதியினரின் வீட்டில் 80 சவரன் தங்க நகைகள் திருடு போனதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்தபோது, வீட்டிற்கு வந்த இளைய மகன் ஜெய்கிருஷ்ணா பீரோ திறக்கப்பட்டு நகைகள் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டின் சாவியை அவ்வப்போது வந்து செல்லும் பணியாளர்கள் பயன்படுத்துவதாகவும், இந்த நடைமுறையை அறிந்த யாரோ ஒருவர் சாவியை எடுத்து நகைகளைத் திருடிச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கருங்கல்பாளையம் போலீசார் மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.