தமிழ்நாடுதலைகுனியாது என்றதலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

1பார்த்தது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும். தமிழ்நாடு தலைகுனியாது' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கார்த்திகேய சிவ சேனாதிபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு தொகுதி பொறுப்பாளர் திருமதி மீனா ஜெயக்குமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ். எல். டி சச்சிதானந்தம், மாநில மாணவர் அணி துணை செயலாளர் திருமதி வீரமணி ஜெயக்குமார், மாவட்ட கழக துணைச் செயலாளர் ஆ. செந்தில்குமார், சின்னையன், செல்ல பொன்னி, தலைமை செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி, ஈரோடு மாநகர கழக செயலாளர் மு. சுப்பிரமணியம், 2 ஆம் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) MPசுப்பிரமணியம், மாநகராட்சி துணை மேயர் பகுதி கழக செயலாளர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் ஆ. ஜெகதீசன், வட்டக் கழக செயலாளர் வினோத்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி