ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குமாரபாளையம் மேற்கு வாலான் வீதி தோட்டப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஞானசேகர், நேற்று தனது தோட்டப்பணிக்காக டிராக்டரை இயக்கியபோது, விளையாடிக் கொண்டிருந்த அவரது 11 மாத பெண் குழந்தை பொன் பரணி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.