ஈரோடு லோகோ பணிமனையில் 70 டன் எடையுள்ள ரயில் பெட்டியை 30 அடி உயரத்தில் இருந்து தூக்கும்போது ஏற்பட்ட பழுது காரணமாக பெட்டி திடீரென கீழே விழுந்தது. இந்த விபத்தில் பெட்டி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, பெட்டியின் அடிப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.