ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவரும் முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினருமான கே.என். பாஷாவின் பிறந்தநாள் விழா, ஜவஹர் இல்லத்தில் இன்று (05.02.2026) காலை 11:45 மணிக்கு நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பா. ராஜேஷ் ராஜப்பா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கே.என். பாஷாவுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் டி. திருச்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில முதன்மை துணைத் தலைவர் எம். ஜவஹர் அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.