உலக வனஉயிரின தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. வனப் பாதுகாப்பில் சிறப்பான சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு 'இயற்கை பாதுகாப்பில் முன்னோடி' விருது, சான்றிதழ் மற்றும் தலா ₹25,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் திரு. ச. கந்தசாமி இ. ஆ. ப. அவர்கள் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். மாவட்ட வன அலுவலர் திரு. கு. வெ. அப்பால நாயுடு இ. வ. ப. உடனிருந்தார்.