ஈரோடு அருகே கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைக்க முயன்றனர். அலாரம் சத்தம் கேட்டதால் கொள்ளை முயற்சி தோல்வியடைந்தது. பணம் கொள்ளை போகவில்லை. வங்கி ஊழியர்களின் புகாரை அடுத்து சூரம்பட்டி போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.