ஈரோடு பெருந்துறையில் சாலையில் உள்ள சுதா மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, சிறுநீரக செயலிழப்பு, டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சுதா மருத்துவமனையின் சேர்மேன் டாக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் நாகேந்திரன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோபிநாத், ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து சிறுநீரக செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்தும், உடல் உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறினர்.
மேலும், சுதா மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்த 6 குடும்பத்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து நலமுடன் உள்ளவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. 37 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது