கோவை பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், ஈரோடு தபால் நிலையத்தில் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திலும் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தினார். இதனையடுத்து, ஈரோடு பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், இது வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் தலைமை தபால் நிலையம் சிறிது நேரம் பரபரப்பானது.