ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நடைபெறும் ஜவுளி வார சந்தையில், தீபாவளி பண்டிகைக்குப் பிறகு வியாபாரம் மந்தமடைந்துள்ளது. கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சில்லறை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் அடுத்த வாரம் கார்த்திகை மாதம் பிறப்பதால் காவி வேஷ்டி, துண்டு விற்பனை அதிகரிக்கும் என்றும், வியாபாரம் சீரடையும் என்றும் நம்புகின்றனர்.