சென்னிமலை: வாய்க்காலில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

1பார்த்தது
சென்னிமலை: வாய்க்காலில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி
சேலம் மாவட்டம் சித்துார், மாக்கல்காட்டைச் சேர்ந்த வெங்கடேசன் (36), அரச்சலுார் அருகே ஜே.சி.பி. ஆப்பரேட்டராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அரச்சலுார் அருகே சில்லாங்காட்டுவலசில் உள்ள எல்.பி.பி. வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னிமலை அருகே சேமலைப்பாளையத்தில் மிதந்த அவரது உடல், சென்னிமலை தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.