ஈரோட்டில் விருவிருப்பாக விற்பனையாகும் கிருஸ்துமஸ் ஸ்டார்கள்

56பார்த்தது
ஈரோட்டில் விருவிருப்பாக விற்பனையாகும் கிருஸ்துமஸ் ஸ்டார்கள்
உலகம் முழுவதும் வருகின்ற 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் வருகின்ற முதலாம் தேதி ஆங்கில புத்தாண்டையும் கிறிஸ்தவர்கள் கொண்டாடப்பட உள்ளனர். கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்மஸ் ஸ்டார்கள் தொங்கவிட்டு அவ்விழாவை கொண்டாடி மகிழ்வர். இதன் காரணமாக தற்போது ஈரோட்டில் உள்ள முக்கிய பகுதிகளான பேஸ் பார்க், கடைவீதி பகுதி, பிரப்ரோடு, பெருந்துறை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் கிறிஸ்துமஸ் மரங்கள், ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உடை, முகமூடி போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்துமஸ்க்கான பொருட்களை கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர். கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் மற்றும் இதர பொருட்கள் ரூபாய் 50 முதல் 4,500 வரை உள்ளதால் தற்போது கிறிஸ்துமஸ் பொருட்கள் வரவேற்புடன் விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி