ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட எம் ஜி ஆர் நகர் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிலருக்கு பட்டாக்கள் வழங்கப்படாததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் அமைச்சர் முத்துசாமியை சந்தித்து முற்றுகையிட்டு, தங்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.