ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், நேற்று வைரபாளையத்தில் உள்ள நுண் உரக்கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார். மாநகரில் நாளொன்றுக்கு சேகரிக்கப்படும் 270 டன் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்கப்படுகிறது. ஆணையர், உரம் தயாரிக்கும் முறைகள், நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையங்களின் செயல்பாடுகள், இயந்திரங்கள் மற்றும் மின்மோட்டார்கள் இயக்கம் குறித்து மாநகர நல அலுவலர் கார்த்திகேயனிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் உதவி செயற்பொறியாளர் பிச்சமுத்து உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.