விசைத்தறி சங்கத்தின் முன்னாள் நிர்வாகி மீது புகார்

2பார்த்தது
ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அக்டோபர் 5, 2015 அன்று தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. செய்தித் தொடர்புத் துறைக்காக நியமிக்கப்பட்ட பா. கந்தவேல், சங்கத்தின் முகநூல் பக்கத்தை நிர்வகித்து வந்தார். ஓராண்டுக்கு முன்பு சங்க விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதால் அவர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். அவரிடமிருந்த முகநூல் ஐடியைத் திரும்பக் கேட்டபோது அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. சம்பளம் பெற்றுப் பராமரிக்கப்பட்ட சமூக ஊடகப் பக்கத்தை மீட்டுத் தரக் கோரி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சங்கம் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி