தேர்தல் கண்காணிப்புக் குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம்

0பார்த்தது
தேர்தல் கண்காணிப்புக் குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு, பிப். 25: தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. கந்தசாமி இ. ஆ. ப. அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்க்க அமைக்கப்படும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழு, வீடியோ பார்வையிடும் குழு மற்றும் கணக்கீட்டுக் குழு ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள குழுவினருக்கான பயிற்சிக் கூட்டம் இதுவாகும். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. சு. சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. தேன்மொழி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி