தேமுதிக "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2. 0பயணம்

1பார்த்தது
கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெறும் தேமுதிகவின் "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0"-க்காக, ஈரோடு மாநகர் மாவட்ட அக்ரஹாரம் பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாகப் புறப்பட்டுச் சென்றனர். மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தின் ஆலோசனைப்படி, பகுதி கழகச் செயலாளர் பெருமாள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கேப்டன் செல்வராஜ் தலைமையில் 70-க்கும் மேற்பட்டோர் ஈரோட்டில் இருந்து உற்சாகத்துடன் கிளம்பினர். பயணத்தின் போது, பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் எழுச்சியுடன் சென்றனர்.

தொடர்புடைய செய்தி