200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்

3பார்த்தது
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தமிமுன் அன்சாரி தெரிவித்தார். கொங்கு மண்டலத்தின் 50 தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வலுவான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடிய அவர், அமெரிக்காவுடன் செய்யப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் தொழில் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும், இதனால் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களின் பின்னலாடை மற்றும் நெசவுத் தொழில்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் கவலை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி