ஈரோடு அருகே கருங்காடு, பொன்னாண்டா வலசு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், கேசவன் (40) என்பவர் வீட்டில் 3 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், மேல் விசாரணைக்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.