தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் திரு. ச. கந்தசாமி இ. ஆ. ப. தலைமையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பிற்கான இட ஒதுக்கீடு நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த முக்கியப் பணிகள் நடைபெற்றன.