மாநகராட்சியில் அவசரக் கூட்டம் 50 பேருக்கு பட்டா

284பார்த்தது
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அவசர மாமன்ற கூட்டத்தில், பெருமாள் மலை பகுதியில் 30 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசிக்கும் 50 பயனாளிகளுக்கு மாநகராட்சியின் சார்பில் பட்டா வழங்க ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆணையாளர் அர்பித் ஜெயின் முன்னிலை வகித்தார். மேலும், மாநகராட்சிக்குத் தேவையான எழுதுபொருள் மற்றும் அச்சுப்பிரதி தேவைகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் வெளியிடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி