ஈரோடு: அஸ்ஸாமில் இருந்த வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா

4பார்த்தது
ஈரோடு: அஸ்ஸாமில் இருந்த வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா
அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஈரோடு ரயில் நிலையத்தில் சோதனை செய்தபோது, முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பையில் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு மதுவிலக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்தியவர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி